’மை லார்ட்’ படக்குழுவை பாராட்டிய சூர்யா…..!

நடிகர் சூர்யா ‘மை லார்ட்’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இயக்குனர் மற்றும் நடிகரான சசிக்குமார் நடிப்பில் நேற்று (பிப்.13) வெளியான படம் ’மை லார்ட்’. “ஜோக்கர், குக்கூ, ஜப்பான்” ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் குரு சோகசுந்தரம், கன்னட நடிகை சைத்ரா ஆச்சர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘மை லார்ட்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதை ஒட்டி அப்படத்தின் விநியோகஸ்தரான நடிகர் சூர்யா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.