முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மருத்துவரின் ரசீது இல்லாமல் மருந்துகள் வழங்கும் கடைகளுக்கு சீல் – மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை

மருத்துவரின் பரிந்துரைகள் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமல் மருந்துகள் வழங்கிய மருந்தகத்திற்கு மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இது குறித்து மருந்துக் கட்டுப்பாட்டு துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் தொடர்ச்சியாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளால் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்ராஜபக்சே மீண்டும் பிரதமரா? – இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம்

அந்த சோதனைகளின்போது சென்னை, பெருங்குடி திருமலை நகர் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில்  வலி நிவாரணி மருந்துகளை பெருமளவில் வாங்கி மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலும் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும்  விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

எனவே அந்த மருந்து கடைக்கு கொட்டிவாக்கம் சரக மருந்துகள் ஆய்வாளரால் பெருங்குடி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் சட்டத்தின் கீழ் அக்கடையின் மீது சட்ட நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அம்மருந்துக்கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இதையும் படிக்கவும்: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை- அமைச்சர்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள், மன நோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டை தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

102 நாட்களுக்கு பிறகு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

Gayathri Venkatesan

காவல்நிலையம் அருகே இரு சக்கர வாகனம் திருட்டு

EZHILARASAN D

தேவைப்படும் போது ஆளுநரை கொண்டாடுகிறது திமுக: ஜெயக்குமார்

EZHILARASAN D