சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல்
மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ரூ.4 கோடி செலவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை அரங்கம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல் கல்லீரல் மாற்று அறுவை
சிகிச்சை செய்து கொண்டு குணமடைந்த நபரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையும் குரோம்பேட்டை ரெலா மருத்துவமனையும் இணைந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி செய்தது. இதேபோல் ஸ்டான்லி, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை, கோவை அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட 5 மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, இந்த மருத்துவமனைகளில் எல்லாம் அறுவை சிகிச்சைக்கு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதையும் படிக்கவும் : மாணவர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும்- இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்
ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ரூ.4 கோடி செலவில் கல்லீரல் மாற்று
அறுவை சிகிச்சைக்கு அரங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக ஈரோடு சேர்ந்த 52 வயதுள்ள மணி என்பவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்துள்ளதாக தெரிவித்தார்.
மணி என்பவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து 17 நாட்கள் ஆகிறது. நல்ல உடல்
நலத்துடன் உள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்ப உள்ளார். மூளை சாவு அடைந்த ஒருவரின் கல்லீரல் தான் இவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. அவரின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தனியார் மருத்துவமனையில் 30 முதல் 35 லட்சம் வரை செலவாகும் இந்த அறுவை
சிகிச்சை தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழுவதும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. 2008ல் தொடங்கப்பட்ட காப்பீட்டு திட்டமூலம் பலர் பலன் அடைந்துள்ளனர். அரசு மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த அரசு மற்றும் தனியார் 1760 மருத்துவமனைகளில் உள்ள காப்பீட்டு திட்டம் மூலம் 1 கோடியே 42 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
ரூ.2000 கோடி செலவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மேம்படுத்த
மருத்துவ கட்டமைப்பு பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதில்
200 க்கும் மேற்ப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட
உள்ளது. 1021 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று விளம்பரம்
செய்யப்பட்டது. 25 ஆயிரம் மருத்துவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அடுத்த மாதம்
இவர்களுக்கான பணி ஆணைகள் எம்ஆர்பி மூலம் வழங்கப்படும் என்றார்.
தொடர்ச்சியாக, 1546 மருத்துவர்கள் சித்தா, ஆயுர்வேதம் யுனானி, யோகா உள்ளிடவைகளில் 100 சதவீதம் நிரப்பப்பட்டது. இது போல ஒவ்வொரு துறையில் சட்டபடி
பணி நியமனம் செய்யப்படும் என்றார்.