சென்னை பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியின் 52-வது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, 25 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடத்தை இந்த கல்லூரியில் அமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் முறையிட்டோம். அதை ஏற்று கொண்ட முதல்வர், அதற்கான பணிகளுக்கு உத்தரவிட்டார். தற்பொழுது அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்வரின் சொல்லாமல் செய்யும் செயல்களுக்கு பாரதி கல்லூரி ஒரு சான்றாக விளங்குகிறது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் முதலமைச்சர் இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். அண்ணா இருமொழி கொள்கையை கொண்டு வந்தார். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல. ஆங்கிலம் தமிழ் உள்ளிட்ட மொழிகள் நிச்சயம் வேண்டும். இந்தி, தெலுங்கு, வேண்டும் என்பவர்கள் அவற்றை படிக்காலம். ஆனால் கட்டாயம் படிக்க வேண்டிய மொழி ஆங்கிலம், தமிழ். இன்னொரு மொழியும் (இந்தி மொழி) கட்டாயம் வேண்டுமா என அமைச்சர் பொன்முடி மாணவிகளை நோக்கி கேள்வி எழுப்பினார். வெளிநாடுகள் சென்றாலும் நமக்கு ஆங்கிலம் உதவும். எனவே ஆங்கிலம் என்பது பெரிய ஓட்டை, சிறிய ஓட்டை (இந்தி) தேவையில்லை. நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா என மாணவிகளிடம் அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.
அண்மைச் செய்தி: ராஜபக்ச மீண்டும் பிரதமரா? – இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம்
புதிதாக வந்தவர் சொல்கிறார் என ஆளுநரை மேற்கோள்காட்டி 3,5,8-ம் வது படிப்பவர்களுக்கு பொதுத்தேர்வு வைக்க வேண்டுமாம். புதிய கல்வி கொள்கையில் 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்கிறார்கள். 3,5,8 -ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் எல்லாரும் படிப்பார்களா ? கேள்விய எழுப்பிய அவர், தமிழ்நாட்டில் என்று மாநில கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் காலத்தில் போட்டித் தேர்வுகளுக்கு மாணவிகள் பயிற்சி பெற வேண்டும். தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே உயர்கல்வியில் 53% பெற்று முதலிடமும் மொத்த கல்வியில் இரண்டாம் இடமும் வகிக்கிறது அதற்கு திராவிட மாடல் ஆட்சிதான் காரணம் என தெரிவித்தார்.