அரசு முறைப்பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் அமைச்சர் ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்தார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லி உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முன்னாள் ஆளுநரும் தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று காலை டெல்லியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.இதைத் தொடர்ந்து இன்று மதியம் 1.15 மணியளவில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் விரிவாக பேசினார். இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை பரிசளித்தார்.
அண்மைச் செய்தி : ’சிறந்த ஊழியர்’ விருது வாங்கியவரை பணி நீக்கம் செய்த கூகுள் நிறுவனம்
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது..
”தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர், திறன் மேம்பாடு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு & மானியங்கள் குறித்து மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் ஸ்ரீகிரிராஜ் சிங்கை டெல்லியில் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர், திறன் மேம்பாடு&மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு & மானியங்கள் குறித்து, மாண்புமிகு @MoRD_GOI & @mopr_goi அமைச்சர் @girirajsinghbjp அவர்களை டெல்லியில் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம். pic.twitter.com/hn2AA91i6z
— Udhay (@Udhaystalin) February 28, 2023
–யாழன்