தவெக மாவட்ட நிர்வாகிகள் நியமனம் : விஜய் அறிவிப்பு

தவெக தலைவர் விஜய் 8 மாவட்டங்களுக்கான கட்சியின் மாவட்டக் கழக நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இக்கட்சி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனையொட்டி விஜய் தமிழ் நாடு முழுவது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதில்,

தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேற்கொள்ள, கழக அமைப்பானது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, 120 மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 8 மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 
முன்னதாக இன்று  தூத்துக்குடி பெண் நிர்வாகி ஒருவர் மாவட்ட பொறுப்பு கேட்டு, தனது ஆதரவாளர்களுடன் விஜய்யின் தவெக அலுவலகத்தின் முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.