திண்டிவனம் அருகே சக நண்பரின் வீட்டில் நகைகளைத் திருடிய கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன். இவரது மகன் ஐயப்பன் கல்லூரி படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அய்யனாரப்பன் வீட்டிலிருந்த நகைகள் திருடு போய் உள்ளது. இதை அறிந்த அய்யனாரப்பன் ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து புகாரின் பெயரில் ஒலக்கூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அய்யனாரப்பனின் மகன் ஐயப்பனின் கல்லூரியில் உடன் படிக்கும் நண்பர் கெளதம் அய்யனாரப்பனின் வீட்டிற்கு கடந்த ஓராண்டாக வருவதும், போவதுமாக இருந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அய்யனாரப்பன் கெளதம் வந்து போன பிறகு தான் நகைகள் திருடு போய் உள்ளதாகவும், கெளதம் மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறையினர் இடத்தில் புகார் தெரிவித்திருந்தார்,
இதனையடுத்து ஒலக்கூர் காவல்துறையினர் திண்டிவனம் அரசு கல்லூரி, விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர் கெளதமை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அய்யனாரப்பன் வீட்டில் திருடியது நான் தான் என்று கெளதம் ஒப்பு கொண்டுள்ளார். மேலும் அவரிடத்தில் 26 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் கெளதம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து கெளதம் மீது ஏற்கனவே கிளியனூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. சக நண்பரின் வீட்டில் திருடிய இச் சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோ. சிவசங்கரன்







