அடித்து விரட்டிய மகன்: நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்த 70-வயது மூதாட்டி

சொத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு அடித்து விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் 70-வயது மூதாட்டி புகார் இன்று புகார் மனு அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த…

சொத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு அடித்து விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் 70-வயது மூதாட்டி புகார் இன்று புகார் மனு அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கடுகுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் . இவருக்கு வயது 70. இவரது கணவர் செல்லன். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண், 2-பெண் பிள்ளைகள் உள்ளனர். கோவிந்தம்மாளின் கணவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவர் இறப்பதற்கு முன்பாக தனது மகனான சின்னசாமிக்கு தன்னிடம் இருந்த 2.50 ஏக்கர் இடத்தில் 1.30 ஏக்கர் நிலத்தை எழுதி கொடுத்துள்ளார்.

மீதமுள்ள இடத்தில் கோவிந்தம்மாள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.‌ இந்நிலையில் மகன் சின்னச்சாமி மீதமுள்ள 1.20 ஏக்கர் இடத்தை தனது பெயரில் எழுதி தருமாறு அடிக்கடி தனது தாய் கோவிந்தம்மாளிடம் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கோவிந்தம்மாளை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட கோவிந்தம்மாள் பலமுறை புகார் அளித்துள்ளார்.

ஆனால் மகன் சின்னசாமி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று மீண்டும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகன் என்னிடமிருந்து அபகரித்துக் கொண்ட சொத்தை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.