வானத்தை போல மனம் படைத்த மன்னவனே… | நினைவை விட்டு நீங்காத ‘கேப்டன்’ திரைப்படங்கள்!

தமிழ் திரைத்துறையில் ‘கேப்டன்’ விஜகாந்த் படைத்த சாதனைகள் எண்ணிலடங்காதவை.  இவரது படங்கள் 300 நாட்களுக்கு மேல் திரையில் ஓடி சாதனை படைத்தவை.  அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த விஜயகாந்தின் படங்கள் குறித்து இந்த…

தமிழ் திரைத்துறையில் ‘கேப்டன்’ விஜகாந்த் படைத்த சாதனைகள் எண்ணிலடங்காதவை.  இவரது படங்கள் 300 நாட்களுக்கு மேல் திரையில் ஓடி சாதனை படைத்தவை.  அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த விஜயகாந்தின் படங்கள் குறித்து இந்த சிறப்பு தொகுப்பில் காண்போம்..

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்,  தயாரிப்பாளர்,  இயக்குநர்,  தென்னிந்திய நடிகர் சங்க தலைவர்,  அரசியல்வாதி,  தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவர் என 71 வருட தனது வாழ்நாளில் பல தடங்களை பதித்தவர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக திரைத்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தவர்.

அவரது தலைமை பண்பிற்கு சான்றாகவே திரைத்துறையுலகினரும் மக்களும் அவரை ‘கேப்டன்’ என அன்புடன் அழைத்து வந்தனர். இவரது படங்கள் 300 நாட்களுக்கு மேல் திரையில் ஓடி சாதனை படைத்தவை. அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த விஜயகாந்தின் படங்கள்:

  • சின்ன கவுண்டர் (1992) –  315 நாட்கள்
  • கேப்டன் பிரபாகரன் (1991)- 300 நாட்கள்
  • மாநகர காவல் (1991) – 230 நாட்கள்
  • புலன் விசாரணை (1990) – 220 நாட்கள்
  • வானத்தைப் போல (2000) –  175 நாட்கள்
  • ஊமை விழிகள் (1986) – 200 நாட்கள்
  • செந்தூரப்பூவே (1988) – 186 நாட்கள்

  • பூந்தோட்ட காவல்காரன் (1988) – 180 நாட்கள்
  • பாட்டுக்கு ஒரு தலைவன் (1989) – 175 நாட்கள்
  • என் ஆசை மச்சான் (1994) – 175 நாட்கள்
  • அம்மன் கோவில் கிழக்காலே (1986) – 175 நாட்கள்
  • வைதேகி காத்திருந்தாள் (1984) – 175 நாட்கள்
  • ரமணா (2002), சேதுபதி ஐபிஎஸ் (1994) – 150 நாட்கள்
  • வல்லரசு (2000) – 112 நாட்கள்

திரைத்துறைக்குப்பின் அரசியலில் கவனம் செலுத்திய விஜயகாந்த்,  2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எதிர்கட்சித்தலைவராக சட்டப்பேரவையில் அமர்ந்தார்.

இந்நிலையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை(டிச.28) உடல்நலக்குறைவால் காலமானார்.  தமிழ் திரையுலகிலும் சரி,  அரசியலிலும் சரி அவரது அயரத உழைப்பும்,  ஆற்றிய பணிகளும் அளவிடமுடியாதவை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.