போகோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்போன் மாடல்களான X8 Pro மற்றும் X8 Pro Max ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடல்களின் விலை, கேமரா, பேட்டரி உள்ளிட்ட முக்கிய அம்சங்களை பற்றி காண்போம்….!
விலை
POCO X8 ப்ரோ
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் – ரூ 30,999
12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் – ரூ 32,999
POCO X8 ப்ரோ மேக்ஸ்
12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் – ரூ 45,999
12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் – ரூ 49,999
இது தவிர போகோ X8 ப்ரோவின் சிறப்பு ‘அயர்ன் மேன் எடிஷன்’ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இது 12ஜிபி ரேம் + 512ஜிபி என்ற ஒரே வேரியண்ட்டில் ரூபாய் 51,999 என்ற விலையில் கிடைக்கிறது.
வடிவமைப்பு (Design)
போகோ X8 ப்ரோ மற்றும் X8 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டுமே, dual vertical camera உடன் circular cutouts அமைப்பைக் கொண்ட ஒரே மாதிரியான வடிவமைப்பில் வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் உலோக சட்டகத்துடன் வருவதுடன், IP66, IP68, IP69 மற்றும் IP69K water மற்றும் dust resistance ஆகியவற்றையும் கொண்டுள்ளன.
POCO X8 Pro ஆனது 2756 x 1268 ரெசல்யூஷன் கொண்ட 6.59-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதே சமயம் X8 Pro Max ஆனது 2772 x 1280 ரெசல்யூஷன் கொண்ட பெரிய 6.83-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இரண்டு போன்களும் அடாப்டிவ் 1-120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3,500 நிட்ஸ் உச்சபட்ச பிரகாசத்தை வைத்துள்ளன.
செயல்திறன்
POCO X8 Pro Max 5G ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 9500s processor-ஆல் இயக்கப்படுகிறது, அதே சமயம் சாதாரண POCO X8 Pro மாடலில் டைமென்சிட்டி 8500-அல்ட்ரா சிப் இணைக்கப்பட்டுள்ளது. சாதாரண மாடலில் 12GB வரை LPDDR5X RAM உள்ளது, அதேசமயம் மேக்ஸ் மாடல் இதை 12GB LPDDR5X அல்ட்ரா RAM-ஆக கொண்டுள்ளது. இதற்கிடையில், இரண்டு போன்களிலும் UFS 4.1 internal storage உள்ளது. அதிக நேரம் கேம் விளையாடும்போது வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க, இரண்டு சாதனங்களிலும் 3D ICELOOP cooling systems பொருத்தப்பட்டுள்ளன.
மென்பொருள்
போகோ X8 ப்ரோ சீரிஸ், ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான HyperOS 3.0 இயங்குதளத்தில் முன்பே நிறுவப்பட்டு வருகிறது. Xiaomi-யின் இந்த துணை பிராண்ட், இரண்டு போன்களுக்கும் நான்கு வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களையும், security updates அப்டேட்களையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
கேமரா
கேமராக்களைப் பொறுத்தவரை, இரண்டு போன்களிலும் 50MP முதன்மை கேமரா, 8MP இரண்டாம் நிலை லென்ஸ் மற்றும் 20MP செஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இருப்பினும், அவை வெவ்வேறு முதன்மை லென்ஸ்களைப் பயன்படுத்துகின்றன. மேக்ஸ் மாடல் Light Fusion 600 லென்ஸையும், ஸ்டாண்டர்ட் ப்ரோ மாடல் சோனி IMX882 சென்சாரையும் பயன்படுத்துகின்றன. இரண்டு கேமரா அமைப்புகளும் பின்பக்கத்தில் 60fps வேகத்தில் 4K வீடியோ பதிவை ஆதரிக்கின்றன.
பேட்டரி
போகோ நிறுவனம் X8 Pro Max 5G மாடலில் ஒரு பிரம்மாண்டமான 9,000mAh பேட்டரியை வழங்கியுள்ளது, அதேசமயம் சாதாரண X8 Pro மாடல் சற்றே சிறிய 6,500mAh பேட்டரியுடன் வருகிறது. இரண்டு சாதனங்களிலும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பயணத்தின் போது உங்கள் மற்ற துணைக்கருவிகளுக்கு சார்ஜ் ஏற்ற 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளன.
ஆஃபர் (Offer)
அறிமுகச் சலுகைகளின் படி X8 Pro ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்கள் வங்கி அட்டைகள் அல்லது எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் மூலம் ₹ 3,000 தள்ளுபடியைப் பெறலாம். இந்தச் சலுகைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், POCO X8 Pro-வின் நிகர ஆரம்ப விலை ₹ 27,999 ஆகவும், X8 Pro Max-ன் விலை ₹ 42,999 ஆகவும், Iron Man Edition-ன் விலை ₹ 48,999 ஆகவும் குறைகிறது. மேலும், இந்த அறிமுகச் சலுகைகளின் ஒரு பகுதியாக, இரண்டு மாத YouTube Premium மற்றும் மூன்று மாத Spotify Premium-ஐயும் வழங்குகிறது.
விற்பனைக்கு எப்போது..?
இந்த X8 Pro வரிசையானது, மார்ச் 23 அன்று மதியம் 12 மணி முதல் பிரத்தியேகமாக Flipkart வழியாக விற்பனைக்கு வருகிறது . அறிமுக நாளன்று ஸ்மார்ட்போன்களை முன்கூட்டிய வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 வருட extended warranty மற்றும் 1 வருட screen damage protection-ம் வழங்கப்படும்.







