நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ’கருப்பு’. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
கருப்பு’ படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியான GOD MODE பாடல் ரசிகர்கள் மத்தியில் ரல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நடிகர் சிம்புவின் குரலில் விரைவில் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி ’கருப்பு’ திரைப்படம் வரும் மே மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.








