ஐடிபிஐ வங்கி 2026 ஆம் ஆண்டிற்கான புதிய ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 8 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிளைகளில் 1,300 அதிகாரி பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளை (மார்ச் 19) ஆகும். ஆகவே ஆர்முள்ளவரக்ள் உடனே விண்ணப்பிக்கவும்……………!
பணி விவரம்
அசிஸ்டென்ட் மேனேஜர் – 200 இடங்கள்
ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் – 1,100 இடங்கள்
சம்பளம்
அசிஸ்டென்ட் மேனேஜர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவரக்ளுக்கு ஆண்டுக்கு ரூ. 10 – ரூ. 12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் . அதேபோல ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பதவிக்குத் ஆண்டுக்கு சுமார் ரூ.6.14 லட்சம் முதல் ரூ.6.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
தகுதி மற்றும் வயது வரம்பு
அசிஸ்டென்ட் மேனேஜர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்றும் BFSI-யில் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு வயது வரம்பு 21 முதல் 30 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் உதவியாளர் மேனேஜர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்றும் அடிப்படை கணினி அறிவும் இருக்க வேண்டும் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைக்கு வயது வரம்பு 20 முதல் 25 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ளவர்கள் இந்த வேலைக்கு முதலில் ஐடிபிஐ வங்கியின் https://www.idbibank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.







