தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் அரசியல் பயணம் குறித்து விரிவாக காணலாம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர். அவரது அரசியல் பயணம் குறித்து விரிவாக காணலாம்
அரசியல் களத்தில் விஜயகாந்த் :
- 2003- நற்பணி மன்ற நிர்வாகிகளை உள்ளாட்சி தேர்தலில் களம் இறக்கினார்.
- 2005 செப்.14 – மதுரை மாநாட்டில் “தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்” என கட்சியின் பெயர் அறிவிப்பு
- 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துக் களம் கண்ட விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் வெற்றி – தேமுதிக 8.4 % வாக்குகளை பெற்றது
- 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10% வாக்குகளை பெற்றது தேமுதிக

- 2011 சட்டப்பேரவை தேர்தல் அதிமுக- தேமுதிக கூட்டணி: 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி -எதிர்க்கட்சி தலைவர் ஆனார் விஜயகாந்த்
- 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாமக, பாஜக வுடன் கூட்டணி: 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை
- 2016 சட்டப்பேரவை தேர்தல் – இடதுசாரிகள், மதிமுக, விசிக, தமாகா, கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டாணியை உருவாக்கி விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தனர் – 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை

- 2019 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு: அனைத்து தொகுதிகளிலும் தோல்வி
- 2021 சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது







