பணிபுரியும் பெண்களுக்காக நாடு முழுவதும் சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். முன்னதாக, புதிய பட்ஜெட்டுட்டுக்கு முறைப்படி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதனைத்தொடர்ந்து அவர் உரையாற்றினார்.
பெண்கள் தொடர்பான திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
- வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படுவதன் மூலமும், அவர்களுக்கு சிறப்பு திறன் ஏற்பாடு செய்வதன் மூலமும் இது சாத்தியமாகும்.
- நாட்டிலேயே உள்ள கல்வி நிறுவனங்களில் பயில ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும். மத்திய அரசின் எந்த சலுகைகளும் பெறாத மாணவர்களுக்கு கல்விக் கடனாக ரூ.10 லட்சம் தரப்படும்.
- வேளாண் துறையில் டிஜிட்டல்மயம் புகுத்தப்படும்.
- தொழில்துறையுடன் இணைந்து பெண்களுக்கான சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
- அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








