இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளில் இந்தியாவும், 1 போட்டியில் நியூசிலாந்தும் வென்றது.
இந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்பதால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா அல்லது அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ்.
நியூசிலாந்து: பின் ஆலென், கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), ஜாக் போல்க்ஸ் அல்லது ஜேம்ஸ் நீஷம், பிரேஸ்வெல் அல்லது சோதி, கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, ஜேக்கப் டப்பி.







