இன்று அமைச்சரவைக் கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது.!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிப்ரவரி மாதம் சட்டசப் பேரவைக் கூட்டம் கூட உள்ள நிலையில்,  ஜனவரி 23-ம் தேதியான இன்று  காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

பிப்ரவரி மாதம் சட்டசப் பேரவைக் கூட்டம் கூட உள்ள நிலையில்,  ஜனவரி 23-ம் தேதியான இன்று  காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவையின்  கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 2-வது வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிலையில்  விரைவில், மக்களவை தேர்தலும் அறிவிக்கப்பட உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசும் வரும் பிப்ரவரி மாதத்திலேயே தனது 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில்,  புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல்,  சட்டமன்ற கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு பிறகு அடுத்த மாதம் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் மற்றும் ஆளுநர் உரை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.