சீனாவில் பயங்கர நிலநடுக்கம் – பாதிப்பை உணர்ந்த டெல்லி மக்கள்.!

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்  ஏற்பட்டதால் அதன் பாதிப்பு டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவகல்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் சின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில்  7.2 …

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்  ஏற்பட்டதால் அதன் பாதிப்பு டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவகல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவின் சின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில்  7.2  ஆக பதிவாகியுள்ளது.  இதுவரை  சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

சீனாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்  இந்திய தலைநகர் டெல்லி மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவில்  உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 80 கிலோமீட்டர் ஆழத்தில்  ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 11ம் தேதி ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டரி அளவுகோலில்  6.1 ஆக பதிவானது.

இதன் தொடர்ச்சியாக டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் லேசான நடுக்கம் ஏற்பட்டது.  அதேபோல பாகிஸ்தானிலும் நில அதிர்வு உணரப்பட்டது.  இதனால் 200க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/NCS_Earthquake/status/1749500398644392085

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.