49-வது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமானது (BAPASI) ஆண்டுதோறும் புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 49-வது புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தார்.

மேலும் அவர் புத்தக அரங்குக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைத்தார். இன்று தொடங்கியுள்ள புத்தக கண்காட்சியானது முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு சாதனை அளவாக சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

புத்தகக் காட்சியில், அனைத்து நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.