குருத்வாராவின் சுற்றுச்சுவரில் தஞ்சமடைந்த புலி | இணையத்தில் வைரலாகும் வீடியோ!

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவின் சுற்றுச்சுவரில் புலி ஒன்று ஓய்வெடுக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து புலி…

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவின் சுற்றுச்சுவரில் புலி ஒன்று ஓய்வெடுக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று தப்பியுள்ளது.  இன்று(டிச.26) அதிகாலை 2 மணியளவில் அட்கோனா கிராமத்திற்குள் நுழைந்த அந்த புலி,  அங்கிருந்த சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவின் சுற்றுச்சுவரில் தஞ்சமடைந்துள்ளது.

புலியைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து,  அங்கு வந்த வனத்துறையினர் புலி தப்பிக்காத வகையிலும், அசாம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாகவும் குருத்வாராவை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர். மேலும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

குருத்வாரா சுவற்றில் உள்ள புலிக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் குருத்வாராவை ஒட்டிய வீடுகளின் கூரைகளிலும், பாதுகாப்பு வலைக்குப் பின்னால் இருந்தும் புலியைக் காண ஏராளாளமான மக்கள் குவிந்துள்ளனர்.

குருத்வாரா சுவற்றில் தஞ்சமடைந்துள்ள புலி எதையும் கண்டுக்கொள்ளாமல் அமைதியாக ஓய்வெடுக்கும் விடியோவானது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/airnewsalerts/status/1739501619077882330

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.