தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் முந்தைய அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதன் படி நேற்று தமிழ் புதல்வன், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
அதே நேரம் மகளிர் உரிமை தொகை குறித்து முதலமைச்சர் விஜய் நேற்று வெளியிட்டு இருந்த அறிவிப்பில், “பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான ரூ. 1000 குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.




