கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை..!

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. கோடை மழை காரணமாக மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில்,…

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. கோடை மழை காரணமாக மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், தென் இந்திய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.


.
இந்த் நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கோடை மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரக்கிளைகள் விழுந்தன. இதனால், அகூர், மத்தூர், திருத்தணி உள்ளிட்ட பல கிராமங்களில் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை எற்பட்டது. கோடை மழையால் வெப்பம் தணிந்து நிலவிய குளிர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், பல மணிநேரம் நீடித்த மின் தடையால் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் பெய்த கோடை மழையால் அம்மாபாளையும், ஒண்ணுபுரம் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். கண்ணமங்கலம் அம்மாபாளையம் நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் அம்மாபாளையம் கிராமத்துக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் மற்றும் பள்ளி – கல்லூரி மாணவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் முடங்கினர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.