6.50 லட்சம் சிகரெட் பட் மூலம் விழிப்புணர்வு – சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு குவியும் பாராட்டு!

போர்ச்சுகலில் 6 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிகரெட் பட் எனப்படும் துண்டுகளை சேகரித்து சுற்றுச்சுழல் மாசு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆண்ட்ரியாஸ் நோ இந்த…

போர்ச்சுகலில் 6 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிகரெட் பட் எனப்படும் துண்டுகளை சேகரித்து சுற்றுச்சுழல் மாசு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆண்ட்ரியாஸ் நோ இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக 6 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிகரெட் துண்டுகளை அவர் சேகரித்துள்ளார். அவற்றை மக்கள் கூடும் முக்கிய பகுதியில் குவித்து வைத்து இந்த விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

சிகரெட்டினால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், அவற்றின் பின்புறமுள்ள பட் எனப்படும் பகுதி கொடிய நச்சுக்கழிவு கொண்டது என்று ஆண்ட்ரியாஸ் நோ கூறுகிறார். மேலும் சிகரெட் பட் ஆனது மக்கும் தன்மையற்றது என்பதால் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால்தான், சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த நூதன முயற்சியை தான் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : கர்நாடக தேர்தல் : பாஜக வேண்டுகோளுக்கு இணங்க அதிமுக வேட்பாளர் வாபஸ்!!

இந்தியாவில் ஆண்டுதோறும், சிகரெட்டினால் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் சிகரெட் பயன்பாட்டை குறைக்கவும், தவிர்க்கவும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் ஆண்ட்ரியாஸின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.