வன்னியர் சமூகத்தை ஏமாற்றியவர் முதல்வர் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கூறி வன்னியர் மக்களை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்…

10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கூறி வன்னியர் மக்களை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் அமமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், எத்தனை கோடிகள் இருந்தாலும், ஆட்சி அதிகாரம் இருந்தாலும், மக்களின் வரிப்பணத்தை சுரண்டியவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என அவர் அதிமுகவை குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், 10.5 சதவீத உள்ஓதுக்கீடு என வன்னியர் சமுதாய மக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றியுள்ளார் எனத் தெரிவித்தார். சாதாரண டெண்டர் முதல் கொரோனா வரை ஊழல் நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், எடப்பாடி பழனிசாமி அரசு கஜானாவை காலி செய்து சானிடைசர் போட்டு துடைத்து விட்டதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.