அமைதிக்கான நோபல் பரிசுக்கு கடுமையான போட்டியாளர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான் என நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் ஆஷ்லே டோஜே தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவராக இருப்பவர் ஆஷ்லே டோஜே. இவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
” அமைதிக்கான நோபல் பரிசுக்கு கடுமையான போட்டியாளர் பிரதமர் நரேந்திர மோடிதான். அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். பிரதமர் மோடி உலகின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராகவும், அமைதிக்கான மிகவும் நம்பகமான முகமாக உள்ளார்.
போரிடும் நாடுகளுக்கு இடையே போரைத் தடுத்து அமைதியை நிலைநாட்டும் திறன் கொண்டவர் பிரதமர் மோடி . இந்திய பிரதமர் மோடி செயல்படுத்திய கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது. ஒருவேளை பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு கிடைத்த ஒரு வரலாற்று தருணமாக இருக்கும்” என்று டோஜே தெரிவித்துள்ளார்.
இதனையும் படியுங்கள்: பெண்களுக்கு எதிரான வன்முறைகள்; மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
2018 ஆம் ஆண்டில் இந்திய, சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளுக்கு தென் கொரியா நாட்டின் மிக உயரிய சியோல் அமைதி விருதுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. 28 ஆண்டுகளில் இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் மோடிதான். இதுவரை இந்த விருது 13 புகழ்பெற்ற நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
சியோல் அமைதி பரிசு உலக அமைதி மற்றும் அதிகார சமநிலைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இந்த பரிசு பெற்றவர்களில் பலர் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கான போட்டியாளராக பிரதமர் மோடியைப் பற்றி பேசுவதற்கு இந்த விருது வழி வகுத்துள்ளது.
– யாழன்