மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ;
”இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்கடிக்கு மோடி பணிந்துவிட்டார். நாட்டின் நலனில் சமரசம் செய்துவிட்டார்.
நான்கு மாதங்களாக முன்னேற்றமின்றி இருந்த வர்த்தக ஒப்பந்தமானது தற்போது எந்த மற்றமும் இல்லாத நிலையில் கையெழுத்தாகியுள்ளது. இதனால் மோடியின் பிம்பம் உடைந்துள்ளது. பிரதமர் மோடி சமரசம் ஆகிவிட்டார் என்பதுதான் உண்மை. இதை செய்தது யார்? எப்படி செய்தார்கள் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
அமெரிக்க நீதிமன்றங்களில் கௌதம் அதானிக்கு எதிராக ஒரு வழக்கு உள்ளது. அந்த வழக்கு பிரதமர் மோடி மீதான வழக்கு போன்றது, ஏனெனில் பிரதமர் மோடிக்கும் பாஜகவிற்கும் பின்னால் உள்ள நிதி அமைப்பை அதானி தான் உருவாக்குகிறார்.
இரண்டாவது விஷயம் என்னவென்றால், எப்ஸ்டீன் கோப்புகளிலிருந்து இன்னும் நிறைய விஷயங்கள் வெளிவர வேண்டியுள்ளது. அமெரிக்கா இதுவரை அவற்றை வெளியிடவில்லை. மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடி மீது அழுத்தம் உள்ளது. இவைதான் அந்த இரண்டு அழுத்தப் புள்ளிகள்” என்றார்.







