திருத்துறைப்பூண்டி அருகே சேதமடைந்த சாலையை சீரமைத்து தரக் கோரி கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால்
பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே இடும்பாவனம் மேலவாடியகாடு
கிராமத்தில் உள்ள குறுக்கு சாலை 13 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதன்
பிறகு இந்த சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைத்து தரக் கோரி அப்பகுதி கிராம மக்கள் ஊராட்சித் தலைவரிடம் மனு கொடுத்தும் எந்தவித
நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இடும்பாவனம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிராமத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
—-வீரம்மாதேவி







