சிலம்பரசன் பிறந்தநாள் : சிறப்பு போஸ்டர் வெளியிட்டு “அரசன்” படக்குழு வாழ்த்து..!

சிலம்பரசனின் பிறந்தநாளையொட்டி ’அரசன்’ படக்குழுவானது சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். இயக்குநர் மற்றும் நடிகரான டி. ராஜேந்திரனின் மகனான இவர் சிறு வயதிலேயே சினிமாவிற்குள் நுழைந்தார்.

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த இவர் ’காதல் அழிவதில்லை’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான தம், குத்து, வல்லவன், மன்மதன், சிலம்பாட்டம், வானம், மாநாடு ஆகிய படங்கள் இவருக்கு பெரும் வெற்றியை தந்ததுடன் பரவாலான ரசிகர்கள் வட்டாரத்தையும் உருவாக்கியது.

தற்போது வட சென்னை பிண்ணனியில் உருவாகும் ’அரசன்’ படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். அதே போல தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ’STR5’0 படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘STR51″  படத்திலும் நடிக்க உள்ளார்.

சிலம்பரசன் இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ’அரசன்’ படக்குழுவானது சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு சிம்புக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.