அது தான் பெஸ்ட் – சிஎஸ்கே நினைவுகளை பகிரும் ஹர்பஜன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதே தன் வாழ்நாளில் சிறந்த கிரிக்கெட் நாள்கள் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். 2007ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் சிறப்பான…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதே தன் வாழ்நாளில் சிறந்த கிரிக்கெட் நாள்கள் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

2007ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் சிறப்பான ஆண்டு. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாகியிருந்தார். 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றிருந்தது. தோனி, சேவாக், கம்பீர், ஹர்பஜன்சிங் என்று சில வீரர்கள் மட்டுமே அந்த இரண்டு அணிகளிலும் இருந்தனர்.

இதையும் படிக்க: வயிற்றுக்குள் 56 பிளேடுகளா? – அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

அதைத்தொடர்ந்து ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு தோனி காரணமாக இருந்தார். இப்போதும் ரெய்னா, உத்தப்பா, முரளி விஜய், வாட்சன், டூப்ளசி போன்ற பல வீரர்கள் சிஎஸ்கே அணி குறித்து மிகவும் பெருமையாக பேசுவார்கள். உலகக்கோப்பை வென்றபோதும் சரி, இராண்டாண்டு தடைகளுக்கு பிறகு 2018ம் ஆண்டு சென்னை அணி கம்பேக் கொடுத்து சாம்பியன்ஷிப் அடித்தபோதும் அணியில் இருந்தவர் ஹர்பஜன் சிங். 2018 – 20 வரை ஹர்பஜன் சி.எஸ்.கே அணியில் இருந்தார்.

அந்த அனுபவம் குறித்து மனம் திறந்துள்ள அவர், “பலர் இந்திய அணி உலகக்கோப்பை வென்றதே என்னுடைய சிறந்த கிரிக்கெட் நாள்களாக கருதுவார்கள். நான் அப்படி இல்லை என நினைக்கிறேன். 2018, 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதே என்னுடைய சிறந்த கிரிக்கெட் நாள்கள். தோனி கேப்டன்ஷிப் கீழ் விளையாடியது மிகவும் வித்தியாசமான அனுபவம். மறக்கவே முடியாது.

எந்தவித அழுத்தமும், நாடகமும் இருக்காது. ரிசல்டை பற்றி கவலைப்படாமல் இறங்கலாம். தோற்றாலும் கவலையில்லை. இது மிகவும் வித்தியாசமானது. மிகவும் உற்சாமாகவும் இருந்தது. வீரர்களாக மட்டுமல்லாமல் குடும்பங்களுடன் ஒன்றாக பயணித்தோம்.” என்று கூறியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.