கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக சுமார் 1 கோடி வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் அதானி விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளை எழுப்பி தொடர்ந்து அமளியில்aj ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிக்கவும்: மத்திய அரசின் 10 லட்சம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- மத்திய அமைச்சர் உறுதி
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பௌசியா கான் பெண்களுக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளில் நடந்த குற்றங்களின் விவரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக சுமார் 1 கோடி வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவில் தீர்வு கிடைக்க மத்திய, மாநில தடயவியல் ஆய்வகங்களில் டிஎன்ஏ பகுப்பாய்வு சோதனைகளை எளிமைப்படுத்தும் விதமாக அதிநவீன பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள், 389 பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ நீதிமன்றங்கள் ஆகியவை 2019-20ம் ஆண்டில் மத்திய அரசு அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் மிஸ்ரா கூறினார்.







