முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்: கைத்தறி துண்டுகளை விற்பனை செய்து வாக்கு கேட்ட அக்ரி கணேசன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக தீர்மானக் குழு செயலாளர் அக்ரி கணேசன் கைத்தறி துண்டுகளை தோளில் சுமந்து விற்பனை செய்து பிரச்சாரம் செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வே.ரா மறைந்ததையொட்டி அத்தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக தீர்மானக் குழு செயலாளர் அக்ரி கணேசன் வாக்காளர்கள் மத்தியில் பேசுகையில்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“ 1968ம் ஆண்டு கைத்தறி நெசவு தொழில் மிகவும் மோசமடைந்து கஞ்சி தொட்டி திறக்கும்
நிலை ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டு முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும் கைத்தறி தொழிலை காப்பாற்றவும் விற்பனையை பெருக்கவும் காஞ்சிபுரத்தில் தோளில் துண்டு மூட்டையை சுமந்து கொண்டு வீதி வீதியாக சென்று விற்பனை செய்தனர்.

இதனையும் படியுங்கள்: ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

அதன் பின் கைத்தறி விற்பனை அதிகரித்து நெசவு தொழில் செழிக்க தொடங்கியது. கைத்தறி நெசவு தொழில் செய்யும் நெசவாளர்கள் துன்பத்தை அறிந்த கலைஞர் நெசவாளர்களுக்கு திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் ஒவ்வொரு நல திட்டங்களையும் செய்து கொடுத்தார்.

இன்றைய தமிழக முதலமைச்சரும் நெசவாளர்களுக்கு நிலுவை ஒய்வூதியம் வழங்கியும்,
500 யூனிட் இலவச மின்சாரத்தை ஆயிரம் யூனிட் மின்சாரமாக உயர்த்தியும்,
நெசவாளர்கள் மாதம் தோறும் ஒய்வூதியம் 300 என்பதை ஆயிரமாக உயர்த்தியும் ,
ஆண்டு முழுவதும் கைத்தறி துணிகளுக்கு 20 சவீதம் தள்ளுபடி அளித்து இன்று கைத்தறி தொழில் புத்துயிர் பெற உதவியுள்ளார் “ என அக்ரி கணேசன் தெரிவித்தார்.

இதனையும் படியுங்கள்: அவசர அவசரமாக தரையிரங்கிய ஏர் இந்தியா விமானம்-நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஐம்பது சதவீதம் பேர் ஜவுளி தொழில் வியாபாரிகள், நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள் வசிக்கின்றனர் என்பதால் திமுக தீர்மான குழு மாநில செயலாளர் அக்ரி கணேசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஈரோடு கடை வீதிகளில் கைத்தறி துண்டுகளை குறைந்த விலைக்கு விற்று நெசவாளர்களுக்கு  திமுக அரசு செய்த சாதனைகளை விளக்கி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ்
இளங்கோவனுக்கு ஆதரவாக  பிரச்சாரம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வேதாரண்யம் அருகே மைல் கல்லுக்கு சிறப்பு அபிஷேகம் செய்த சாலைப் பணியாளர்கள்

G SaravanaKumar

“ஜெய் பீம்” விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை; நடிகர் சூரி

Halley Karthik

கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட மோதிரம் அணிந்துள்ள சந்திரபாபு நாயுடு..!

Web Editor