வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு… பட்டியலில் நம்முடைய பெயர் உள்ளதா என்று எப்படி பார்ப்பது…?

தமிழ்நாட்டில் SIR-ன் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில்  நம்முடைய பெயர் இடம் பெற்று இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்..? என்பது பற்றி இதில் பார்ப்போம்

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 14 ஆம் தேதி விண்ணப்பங்கள் பெறுவதற்கான பணிகள் நிறைவடந்தன. இந்த நிலையில் தற்போது தமிழ் நாட்டில் மாவட்டம் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில்  நம்முடைய பெயர் இடம் பெற்று இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

ஒருவர் தங்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து தேர்தலுக்கான இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் மாவட்டம் மற்றும் தொகுதி ஆகியவற்றை தேர்வு செய்து நம்முடைய பெயர் அந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறதா? என்பது குறித்து பூத்தில் அறிந்து கொள்ளலாம்.

அவ்வாறு நமது பெயர் இடம் பெறாத வகையில் இருந்தால் அந்த அந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து முறையிடலாம். ஆவணங்கள் சரியாக இருந்தால் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியும்.

மேலும் தேர்தல் ஆணையம் தரப்பில், 19.12.2025 முதல் 18.1.2026 வரை நடைபெறும் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலகட்டத்தில் தகுதியுள்ள வாக்காளர்களை தஙகள் பெயர்களை பட்டியலில் சேர்த்து கொள்ளாலாம்.  இந்த கால கட்டத்தில் தகுதியற்ற பெயர்களை நீக்க எந்த ஒரு வாக்காளரும் அல்லது அரசியல் கட்சியும் தங்களது கோரிக்கை அல்லது ஆட்சேபனைகளை தாக்கல் செய்யலாம்.  இது தொடர்பான பணிகளில் 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் 1776 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் பணியில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.