கேரள மாநிலம் கோழிகோட்டில் இருந்து சவுதி அரேபியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கேரள மாநிலம் கோழிகோட்டில் இருந்து 182 பயணிகளுடன் காலை 10 மணிக்கு சவுதி அரேபியா தமாம் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்( IX 385) திடீரென தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டது.
விமானம் புறப்படும் போது ஓடு பாதையில் திடீரென சறுக்கி சென்றதை உணர்ந்த விமானிகள் பின்னர் ஹைட்ராலிக் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதாகவும் சந்தேகம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அவசரமாக விமானத்தை தரையிறக்க முயற்சி செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையும் படியுங்கள்: ரயில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு – குறும்படம் எடுத்த போது நிகழ்ந்த சோகம்!
இந்த நிலையில் 11.03 க்கு கரிப்பூர் விமான நிலையத்தில் இறக்க முயற்சி மேற்கொண்டனர். அங்கு சாத்தியம் இல்லாத நிலை இருந்ததால் மேலும் கரிப்பூர் மற்றும் திருவனந்தபுரத்தில் தரையிறக்க முயற்சி செய்தனர்.
இறுதியாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டு அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு பின்னர் விமானம் கோவளம் கடலில் எரிப்பொருளை கொட்டிய நிலையில் வானில் வட்டம் அடித்து 12.45 க்கு தரையிரக்கப்பட்டது.
இதனையும் படியுங்கள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு சோளம் மற்றும் பருத்தியை கொட்டி விவசாயிகள் போராட்டம்
அதிர்ஷ்டவசமாக எந்தவித சேதமும் ஏற்படாத நிலையில் மூன்று மணி நேரத்திற்கு பின்னர் விமானம் தரையிறங்கியதால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விமானத்தில் ஏற்ப்பட்ட தொழிட்நுட்ப கோளாறு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
–வேந்தன்