சென்னையில் வெறிநாய் கடித்து இளைஞர் உயிரிழப்பு!

சென்னையில் வெறிநாய் கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த அருள் என்ற இளைஞர் கடந்த 5ஆம் தேதி என்.எஸ்.கே சாலையில் நடந்து சென்றபோது நாய் கடித்துள்ளது. இதையடுத்து அருள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.