கோயில் திருவிழாவில் தகராறு: ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்குதல் -6 பேர் கைது

புவனகிரி அருகே கோயில் திருவிழாவில்  தகராறில் ஆம்புலன்ஸை வழிமறித்து   தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி மகத்…

புவனகிரி அருகே கோயில் திருவிழாவில்  தகராறில் ஆம்புலன்ஸை வழிமறித்து   தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி மகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தீர்த்தவாரி சென்ற சாமி, மீண்டும் நேற்று முன்தினம் இரவு ஊர்வலமாக ஊருக்கு திரும்பியுள்ளது.

அப்போது அதிக சத்தத்துடன் ஒலிப்பெருக்கியில் பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டதால்
அதனை நிறுத்துமாறு கூறி சாத்தப்பாடியை சேர்ந்தவர்களுக்கும், மேலமணக்குடியை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையும் படியுங்கள்: 1,000 யூனிட் இலவச மின்சாரம் – முதலமைச்சருக்கு நேரில் நன்றி தெரிவித்த விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள்!

இதில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். அந்த ஆம்புலன்ஸை வழி மறித்து சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர் என 6 பேர் காயமடைந்து அருகே உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இரு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், தங்கள் ஊரை சேர்ந்தவர்களை தாக்கியவர்களை கைது செய்ய கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தி நடத்தி, இரு கிராம மக்களையும் கலைந்து போக செய்தனர்: இதனைத்தொடர்ந்து செல்வி (42) என்பவர்  கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.