ஜல்லிக்கட்டு போட்டியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த காளைக்கு அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் சைக்கிள் பரிசு வழங்கப்பட்ட சம்பவம் காண்போருக்கு வியப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் மாசிமக திருவிழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 550 பிடிகாரர்களுக்கு மேல் அனுமதி அளிக்கப்பட்டது.
அண்மைச் செய்தி : அடுத்த தலைமுறை சிறிய டெஸ்லா கார் – தகவலை வெளியிட்ட எலான் மஸ்க்
அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெயரில் அந்த கட்சியின் நிர்வாகிகள் இரண்டு காளைகளை அவிழ்த்தனர். அதில் ஒரு காளை களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. அந்த காளை விளையாடியதை அப்போது சிறப்பு விருந்தினராக மேடையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த முன்னாள் அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த காளைக்கு தனது சைக்கிளை பரிசாக வழங்க விழா குழுவினருக்கு அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. அரசியலில் தற்போது நேர் எதிர் திசையில் டிடிவி தினகரன் விஜயபாஸ்கரன் பயணித்தாலும் ஜல்லிக்கட்டு களத்தில் அரசியலைக் கடந்து சிறப்பாக விளையாடிய டிடிவி தினகரன் காளைக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சைக்கிள் பரிசாக வழங்கியது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.







