கோட்டை யாருக்கு? நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் கடந்த சனிக்கிழமை அன்று நிறைவடைந்தது.  இதையடுத்து பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன்…

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் கடந்த சனிக்கிழமை அன்று நிறைவடைந்தது.  இதையடுத்து பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.  இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது.

இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.  தமிழகத்தில் 39 வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன.  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன்,  ஐபேட்,  லேப்டாக்,  ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.  இதனால் மாவட்டம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் வாக்கு பெட்டிகள்,  தேர்தல் அலுவலர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.