ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெய்லர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தின் நடிகர்கள் 2 அம் பாகத்திலும் தொடரும் நிலையில் சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட புது நடிகர்களும் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் பலர் கேமியோ ரோலில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் ஜெய்லர் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவின் படி ஜெய்லர் திரைப்படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.




