முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு – அக். 3ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு அடுத்த மாதம் நடைபெறுகிறது.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் முதலமைச்சர் தலைமையில், சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள்
மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும்
வனத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் விதமாக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை ஆய்வு செய்வதுடன், அதை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் முதலமைச்சர் அறிவுரைகள் வழங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.