ஆசிய கோப்பை குரூப் 4 சுற்று; இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா…

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர்4 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள்…

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர்4 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த
ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 47 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 197 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னர் மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 53 ரன் அடித்தார்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி வீரர் வெல்லாலகே, 42
ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.