முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி இன்று (28.2.2023) சென்னை, சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதனையும் படியுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

இதனையும் படியுங்கள்: ஓங்கு புகழோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ வேண்டும் – இசைஞானி இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் திரு. சிற்றரசு, முதன்மை அருட்சகோதரி டோமினிக் மேரி, சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளி வளாக இயக்குநர் அருட்சகோதரி சவேரியா, தாளாளர் அருட்சகோதரி மெர்சி ஏன்ஜிலா, உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
– யாழன்







