நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வீடியோ வாயிலாக தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில்,” வணக்கம்! என்னுடைய இனிய நண்பர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நீண்டநாள் நல்ல ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவருடைய 70வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த வீடியோவின் கமெண்ட் பக்கத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு ரஜினி ரசிகர்கள் உட்பட பலரும் றந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.







