டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடுகிறன.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் முக்கிய வீரரான திலக் வர்மாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. விஜய் ஹசாரே தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு அவருக்கு அறுவை செய்யப்பட்டது.
இதனால் அடுத்து நடைபெற உள்ள நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரிலும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் திலக் வர்மா பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.







