காஞ்சியில் வளர்பிறை அஷ்டமி நாளான நேற்று தீயவைகளை அழித்து நன்மைகளைத் தரும் மச்ச ஈஸ்வரர் கோயிலில் பைரவருக்கு வழிபாடு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பைரவருக்கு உகந்த நாள் அஷ்டமி. அஷ்டமி நாளில், எந்தக் காரியம் செய்யாவிட்டாலும் பைரவரை வழிபடுவது மிகவும் பலத்தைக் கொடுக்கும். தீய சக்தியை அழித்து நன்மைகளைத் தந்தருள்வார் பைரவர் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும்
ஆலயங்களில் நடைபெறும். அதேபோல், அஷ்டமி நாளில், சில ஆலயங்களில், ராகுகாலத்தில் பைரவருக்கு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுவது வழக்கம்.
கலியுகத்துக்கு கால பைரவர் என்றொரு சொல் உண்டு. காலபைரவரைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், வீட்டில் உள்ள தீயசக்திகள் அனைத்தும் தெறித்து ஓடிவிடும்.
கண்ணுக்குத் தெரிகிற, கண்ணுக்கே தெரியாத எதிரிகள் எல்லோரும் வீரியம் இழந்து
போவார்கள். பைரவரை எவரொருவர் தொடர்ந்து வழிபடுகிறார்களோ அவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
காஞ்சிபுரத்தில் மச்ச ஈஸ்வரர் பெருமாள் கோவிலில் கால பைரவர் வடகிழக்கு
மூளையில் வீற்றிருக்கிறார் .இங்கு கால பைரவருக்கு மாலையில் அபிஷேகங்கள்
செய்யப்பட்டன .பின்னர் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நகைகளை சுவாமியின் மீது
சாற்றி சுவர்ண அபிஷேகம் செய்யப்பட்டது .பின்னர் சுவாமிக்கு மலர்களைக் கொண்டு
அலங்காரம் செய்து ,சந்தன பொட்டிட்டு தூப , தீப ஆராதனையும் காட்டப்பட்டது.
பக்தர்கள் இந்த பைரவ ஆராதனையைக் கண்டு வழிபட்டனர்
Visual in FTP
KNC BAIRAVAR ASTAMI VAZHIPADU 27-2-23
BYTE . ARCHAGAR SIVA
ரெ.வீரம்மாதேவி







