தென்காசியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு திருநாள் கதிர் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும், தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் கொண்டாடும் திரு நாள்கதிர் எடுத்து வரும் விழா கடந்த 40 ஆண்டு காலமாக இந்த மாவட்ட பகுதிகளில் நடைபெறாமல் இருந்தது.
இந்த திருநாள் கதிர் திருவிழாவினை மீண்டும் நடத்திட தேவேந்திர குல வேளாளர்
சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இந்த மக்களின்
பாரம்பரிய உரிமையினை மீட்டெடுக்கும் பொருட்டு , இந்து சமயஅறநிலையத்துறையுடன்
தொடர்பு கொண்டு, பல்வேறு கட்ட நிகழ்வுகளுக்கு பின்னர் தேவேந்திர குல வேளாளர் மக்கள் உரிமைகளை முறையாக அனுமதி பெற்று திருநாள் கதிர் திருவிழா எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதனையும் படியுங்கள் : அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்-நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகள்
தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் நெற்கதிர்களை சுமந்து வந்து திரு
நாள்கதிர் மண்டபத்தில் உள்ள இறைவனுக்கு பூஜை செய்து, அதன் பின்பு திரு
நாள்கதிர் மண்டபத்தில் இருந்து மேல தாளத்துடனுடன் ஊர்வலமாக நெற்கதிர்களை எடுத்துச்சென்று , தென்காசி அருள்மிகு காசி விசுவநாதர் சுவாமி ஆலயத்திற்கு கொண்டு சென்றனர்.
அதன் பின்னர் காசி விசுவநாதர் மற்றும் உலகம்மை ஆலயத்தில் வைத்து பூஜைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக அம்பாள், முருகன், நடராஜர் ஆகிய
தெய்வங்களுக்கும் நெற்கதிர்களை கொண்டு சென்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி காசி விசுவாசுவாமி கோவிலின் அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.
மேலும், ஏராளமான தேவேந்திர குல வேளாளர் மக்களும் கலந்து கொண்டனர். 40
ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரியங்களை விட்டுக் கொடுக்காமல் , அதனை
மீட்டெடுக்கும் பொருட்டு இந்த விழா நடைபெற்றதாக தேவேந்திர குல வேளாளர் சமுதாய
மக்கள் மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
கு. பாலமுருகன்







