கும்பகோணத்தில் நடைபெற்ற சிறுதானிய உணவு திருவிழாவில் கம்பு, கேழ்வரகு, திணை , சாமை உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களில் உணவு வகைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
உணவு பழக்க வழக்கங்கள் மாறியதை தொடர்ந்து உடல் பருமன், நீரிழிவு , இரத்த
அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மக்களிடையே அதிகரித்து வருகிறது . இதனை
தவிர்ப்பதற்கு நமது பாரம்பரிய உணவு முறைகளை கையாள வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தி பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனையும் படியுங்கள்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழா
இதன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் இன்று சிறுதானியங்களில் உருவாக்கப்பட்ட உணவு வகைகளுடன் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் கம்பு ,கேழ்வரகு , திணை , சாமை, சோளம் உள்ளிட்ட சிறு தானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
200க்கும் மேற்பட்டோர் தங்களது படைப்புகளை இதில் காட்சிப்படுத்தியிருந்தனர்.
மேலும், சிறுதானிய மகசூலை அதிகரிக்கும் வகையில் அதி நவீன கருவிகளும் இந்த உணவு திருவிழாவில் இடம் பெற்றிருந்தன.
முற்றிலும் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளை காண பார்வையாளர்கள் அதிகமாக வந்தனர். புதிய புதிய சிறுதானிய உணவுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கு. பாலமுருகன்







