உதவி லோகா பைலட் வேலை; இந்தியன் ரயில்வே சூப்பர் அறிவிப்பு – முழு விவரங்கள்…!

இந்தியன் ரயில்வே உதவி லோகா பைலட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இந்திய ரயில்வேவானது நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகும். மத்திய அரசு பணி, கை நிறைய சம்பளம், சலுகைகள் ஆகியவற்றால் நாட்டின் பெரும்பாலான இளைஞர்களின் கனவாக ரயில்வே வேலை உள்ளது. இந்த நிலையில் இந்தியன் ரயில்வேயில் உதவி லோகா பைலட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு 2026 மே 15 முதல் ஜூன் 14 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரங்கள்

நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களில் மொத்தம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குறிப்பாக தமிழகத்தில் சென்னை (SR) மண்டலத்தில் 186 உதவி லோகோ பைலட் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி

கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, 10 ஆம் வகுப்புடன் ஐடிஐ முடித்தவர்களும், டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவரகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

வயது வரம்பு

ஜூலை 1, 2026 நிலவரப்படி இந்த பணிக்கான குறைந்தபட்ச வயது 18 ஆகவும் அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கு லெவல் 2 ஊதிய விகிதத்தின்படி மாதம் ரூ.19,900 வழங்கப்படும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் முதல்நிலை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT-1), இரண்டாம் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT-2), கணினி அடிப்படையிலான திறனறிவுத் தேர்வு (CBAT), ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை போன்ற பல நிலைகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST), பெண்கள், EBC, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையினர் போன்றோர் ₹250 செலுத்த வேண்டும்.

ஆர்வமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு http://www.rrbapply.gov.in/ என்ற இந்திய ரயில்வே தேர்வு வாரியத்தின் அதிகார பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிந்துகொள்ளலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.