டோவினோ தாமஸ், பேசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் ‘அதிரடி’. இப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் கலந்து கொண்டார். விழாவில் சஞ்சு சாம்சன் பேசியதாவது, “எனது கிரிக்கெட் மேட்சை பார்த்து பசில் ஜோசப் குறை சொல்வார். அவரின் அதிரடி படத்தை தமிழ் , மலையாளத்தில் பார்த்து நான் குற்றம் கண்டு பிடிப்பேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிரடி படத்தில் எனக்கு சின்ன கேரக்டர் கொடுப்பதாக சொன்னதால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அது ஆட்டோக்காரர் வேடம். ஆனால் ஆட்டோக்காரர்களுக்கு தமிழ்நாட்டில் எவ்வளவு மரியாதை என படம் பார்த்து தெரிந்து இருக்கிறேன்’ என்று கூறினார்.
தமிழ் நாட்டை பற்றி பேசிய அவர், “நான் திருவனந்தபுரத்தில் தமிழ் மக்களோடு வாழ்ந்தேன். ரஜினி, கமல், விஜய் அண்ணா படங்களை சின்ன வயதில் பார்த்து ரசித்திருக்கிறேன். இப்பொழுது சென்னையில் எனக்கு கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.







