முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேங்கை வயல் விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம்  22ஆம் தேதி ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வந்தது. இந்த நிலையில் கண்டுபிடிக்க முடியாததால் இந்த வழக்கை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிபிசிஐடி போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் ஒரு வழக்கை பதிவு செய்து 35 சிபிசிஐடி போலீசார் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிபிசிஐடி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிசிஐடி விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

அண்மைச் செய்தி: ”ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வி.மார்க்ஸ் ரவீந்திரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அந்த சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“முதலமைச்சரின் பிறந்தநாள் என்பதைவிட ஜனநாயகத்தை காப்பாற்றும் திருப்புமுனை நாள் இன்று” – கி.வீரமணி புகழாரம்

Web Editor

உள் ஒதுக்கீடு ரத்து: ”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது”

Janani

வெயிலின் தாக்கத்தை தணிக்க முல்லை பெரியாற்றில் பொதுமக்கள் உற்சாக குளியல்!

Web Editor