ஸ்பேம் கால் (Spam Call) தொல்லையா…? இந்த 4 டிப்சை Follow பண்ணுங்க…?

ஆண்ட்ராய்டு செல்போன்களில் ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்க சில சூப்பர் டிப்ஸ் இதோ உங்களுக்குகாக…!

நம் செல்போன்களில் புது எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் நாம் உடனே அட்டன் செய்து பதிலளிப்போம். அது நெருங்கியவர்கள் அல்லது அவசர உதவிகள் கோருவோரின் அழைப்புகளாக இருக்கும் என்கிற பதட்டமே இதற்கு காரணம். ஆனால் அது ஸ்பேம் காலாக இருந்தால் நம்க்கு எவ்வளவு எரிச்சல் வரும் என்பது அந்த செல்பேசிக்கே தெரியும்.

ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்க சில சூப்பர் டிப்ஸ் இதோ உங்களுக்குகாக…!

1. National Do Not Call பட்டியலில் பதிவு செய்யுங்கள்

National Customer Preference Register-ல் (NCPR) உங்கள் எண்ணைப் பதிவு செய்யுங்கள். இது முன்பு தேசிய ‘Do Not Call’ பதிவேடு (NDNC) என்று அழைக்கப்பட்டது. இதன் மூலம் நீங்கள் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளை தவிர்க்கலாம்.

2. DND சேவையை செயல்படுத்துங்கள்

உங்கள் SMS செயலியைத் திறந்து, “START” என டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும். வங்கிச் சேவைகள், விருந்தோம்பல் போன்ற வகைகளின் பட்டியல் உங்களுக்கு அனுப்படும். இதில் நீங்கள் தடுக்க விரும்பும் அழைப்புகளின் வகைக்குரிய குறியீட்டை ரிப்ளை செய்யவும். இதன் பிறகு, உங்களுக்கு ஒரு உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி வரும், மேலும் 24 மணி நேரத்திற்குள் DND சேவை செயல்படத் தொடங்கும். இது வங்கிகளிடமிருந்து வரும் முக்கிய கால்களை தவிர்த்து, மூன்றாம் தரப்பினரிடமிருந்து வரும் தேவையற்ற வணிக கால்களைத் தடுக்கிறது.

3. தனிப்பட்ட எண்களை Block செய்யுங்கள்

நீங்கள் தனிப்பட்ட முறையில் எண்களை block அல்லது Report செய்யலாம்.

4. Spam Call Filter-ஐ இயக்குங்கள்

உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள போன் ஆப்பை ஓபன் செய்து, அதில் உள்ள Settings-கிற்கு செல்லவும். அதில் உள்ள hree dots மெனுவை ஓபன் செய்து Filter spam calls என்பதை தேர்ந்தெடுக்கவும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.