பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத எட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
1. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி
செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தேங்காய் மற்றும்
கொப்பரை விலை சரிந்துள்ளது. ஆகவே அரசு கொள்முதல் நிலையங்களை அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும் .மேலும் ரேஷன் கடைகள் மற்றும் சத்துணவு திட்டங்களில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். பொள்ளாச்சி பகுதியில் தென்னை வளர்ச்சி வாரியம் அலுவலகம் கொண்டு வர வேண்டும் என்பவை பொள்ளாச்சி பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
2. பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கடந்த 2010ல் மாவட்ட தலைமை மருத்துவமனையாக
தரம் உயர்த்த 8.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஒருங்கிணைந்த புற
நோயாளிகள் பிரிவு கட்டடம் மற்றும் 10.50 கோடி ஒதுக்கப்பட்டு அவசர சிகிச்சை
மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவு கட்டப்பட்டது. ஆனால் போதிய மருத்துவர்கள்
செவிலியர்கள் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் முதலுதவி
அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் சூழ்நிலை உள்ளது.
3.பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது பொள்ளாச்சி மக்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது.
4. பொள்ளாச்சி நகரின் வாகன நெரிசலை குறைக்க 50.33 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கு புறவழி சாலை அமைக்கும் திட்டம் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது . ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது . பணிகள் முடிவடையாமல் ஜல்லிகள் சாலை முழுவதும் சிதறி காணப்படுகிறது.
5. பொள்ளாச்சியில் காவலர் குடியிருப்பு நீண்ட ஆண்டுகள் ஆனதால் புதிய குடியிருப்பு கட்டுவதற்காக பழைய குடியிருப்புகளை இடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் மாற்று கட்டடம் கட்டப்படாதால் காவல்துறையினர் வாடகை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.மேலும் ஆனைமலை பகுதியில் மகளிர் காவல் நிலையம் அமைத்து தர வேண்டும்.
6. பொள்ளாச்சி பகுதியில் அதிக அளவில் விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால்
பி.ஏ.பி திட்ட பாசனத்தின் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரதான மற்றும் கிளை
வாய்கால்கள் சீரமைக்கப்படாமல் சேதமடைந்துள்ளது. இதனால் தண்ணீர் திறக்கும்
போது கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் போய் சேர்வதில்லை. இதை தடுக்க ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்தினை கேரளா அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி நிறைவேற்றி தர வேண்டும் .
7.பொள்ளாச்சியில், 66 ஆண்டுகளாக செயல்படும் கிளை நுாலகத்துக்கு புதிய கட்டடம்
எப்போது கட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நுாலகத்தில் தற்போது, ஒரு லட்சத்து, 800 புத்தகங்கள் உள்ளன; 15,750 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.போதிய பராமரிப்பு இல்லாதததால் கட்டடத்தில் வாசகர்கள் அமர்ந்து படிக்க சிரமப்படுகின்றனர்.
8.பொள்ளாச்சியில் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.







